இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாவிட்டால், தாம் பதவியில் நீடிக்கப்போவதில்லை என அண்மையில் நியமனம் பெற்ற இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (11) தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
தான் இப்பதவியை பொறுப்பேற்கும் வேளையில் மிரிஹான சம்பவம் கூட இடம்பெற்றிருக்கவிலை எனவும், அதன் பின்னர் பல்வேறு சம்பவங்கள் ஆர்ப்பாட்டங்கள், குழப்பங்கள் என நிலைமை மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு ஸ்திரநிலையை ஏற்படுத்தாவிட்டால், தற்போதுள்ள நிலை மேலும் தொடருமானால் யார் மத்திய வங்கியின் ஆளுநராக வந்தாலும் இந்நிலையிலிருந்து விடுபட முடியாத நிலை ஏற்படும் நிலைமையே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.