இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரப் பிரதானி ஒருவரான கே.டி.எஸ்.ருவன் சந்திர அவர்கள், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகவும், மேலதிக ஆணையாளர்களாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரான ரோஹன புஷ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.