வெளிநாடு
ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார், இறக்கும்போது அவருக்கு வயது 73
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதியாக ஷேக் கலீஃபா 2004ஆம் ஆண்டு முதல் இருந்தார், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ளார். .
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருப்பதுடன், அதை உள்ளடக்கிய ஏழு எமிரேட்களின் எண்ணெய் வளம் மிக்க தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஷேக் கலீஃபா இருந்தார்.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவையொட்டி 40 நாட்களுக்கு அவரது மறைவுக்கான துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் கொடிகள் பறக்க விடப்படும் என்றும் அதிபர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.