crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மூதூர் பிரதேசத்தில் 4000 Tom EJC மாமரக் கன்றுகள் விநியோகம்

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் முன்னர் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கிணங்க Development of Export Agri Zone logis எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேசத்திற்கு 4000 Tom EJC மாமரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

இவை உரிய பயனாளிகளுக்கு பகிர்நதளிக்கும் நிகழ்வு இன்று (13) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.பி. எம். முபாரக் தலைமையில் நடைபெற்றது.

இதனை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் சிறந்த அறுவடையை பெறுவதுடன் அதிக வருமானத்தையும் ஈட்டக்கூடியதாக அமையும். இந்த இன மாம்பழத்திற்கு சிறந்த கேள்வி காணப்படுவதுடன் ஒரு கிலோ மாம்பழம் 350-450 ரூபா விலைகளிடையே விற்பனை செய்யப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ். நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 15 =

Back to top button
error: