புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தல வைகாசித் திருவிழா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிகு கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு பெரிய புல்லுமலை புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தல வைகாசித் திருவிழா கடந்த 06 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கடந்த 06.05.2022 அன்று மாலை 4.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி பேதுரு ஜீவராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய திருவிழாவானது ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக திருவிழா வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 13.05.2022 திகதி காலை 6.30 மணிக்கு கித்துள் புனித மார்டின் தெ போரஸ் ஆலயத்தில் இருந்து பெரிய புல்லுமலை தூய செபமாலை அன்னை திருத்தலம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பமாகி இன்று 14.05.2022 திகதி அன்னையின் திருச்சுருபத்தை தாங்கிய ரதம் திருத்தலத்தை வந்தடைந்ததும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று 15 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் ஆலய திருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளது.