இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முற்போக்கான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) தெரிவித்துள்ளது.
இலங்கை புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பதவிகளை ஏற்காமல், பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு தமது பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.