crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் – 5 மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கின்ற வைபவம் இன்று (17) பாடசாலையில் காலை ஆராதனையில் போது இடம்பெற்றது.

அயாஹ் எப்.எம் மற்றும் அயாஹ் தொலைக்காட்சியின் 2ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, சித்திரக் கலையை மாணவர்களிடையே மேலும் வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், இப்பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளில் 242 மாணவர்கள் பங்குபற்றி, அதில் சிறந்த முறையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய 25 மாணவ, மாணவிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

முதல் 5 மாணவ, மாணவிகளுக்கு பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு, ஏனைய 20 பேருக்கு ஆறுதல் பரிசாக சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது சிங்கர் நிறுவனத்தினர் பூரண அனுசரணை வழங்கியிருந்ததோடு, பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார், உதவி அதிபர் எம்.எச்.நுஸ்ரத் பேகம், அயாஹ் எப்.எம். மற்றும் அயாஹ் தொலைக்காட்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஸ்மத் ஸஹ்மி மஜீட், மற்றும் உறுப்பினர்கள், சிங்கர் சோறும் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.எச். ஜிப்ரி மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்வை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி.எம். றின்ஸான் தொகுத்து வழங்கினார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 + = 33

Back to top button
error: