இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்காக இன்று (17) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷ 31 மேலதிக வாக்குகள் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரோஹிணி கவிரத்ன, பொதுஜன பெரமுன சார்பில் அஜித் ராஜபக்ஷவின் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில், அஜித் ராஜபக்ஷ 31 மேலதிக வாக்குகளால் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற வாக்களிப்பிற்கு அமைய, அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளையும், ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 23 வாக்குகள் செல்லபடியற்றது என அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, பொதுஜன பெரமுன சார்பில் அஜித் ராஜபக்ஷ இருவருக்கும் வாக்களிப்பதில்லையென, 10 சுயாதீன கட்சிகள் சார்பில் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தெரிவித்ததோடு, தங்களது வாக்குகளை செல்லுபடியற்றதாக்குவதாகவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.