இலங்கை டெங்கு நோய் ஒழிப்பு பிரிவினால் நாடு முழுவதும் டெங்கு நோய் பரவலைத் தடுக்க கட்டுப்படுத்தும் வகையில் இன்று 18 முதல் மே 24 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
நாடு முழுவதும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் 20,536 பேர் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும், அதில் 2,813 பேர் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்களின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,
இதற்காக பொதுமக்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.