இலங்கை முழுவதும் இன்று 18 மாலை முதல் டீசல் தொடர்ந்து விநியோகிக்கப்படும் எனவும் டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் இன்று (18) உறுதியளித்துள்ளார்.
அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார், இலங்கைக்கு வந்துள்ள கப்பல்களுக்கு டொலர் வழங்க முடியாத நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடி இதனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.பெற்றோல் கையிருப்பு அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்