கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மொரட்டுவ நகரசபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவகபுர பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர்க மஞ்சுள பிரசன்ன ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.