இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை (20) பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார்.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.