crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல்.

நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடற்போக்குவரத்து மற்றும் அதனுடன் கூடிய பிரச்சினைகள், அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (19) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

வடதாரகை படகு பழுதடைந்துள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக போக்குவரத்து படகுகளை பயன்படுத்தல் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற படகுகள் சான்றிதழ்களை பெறுதல், போக்குவரத்துக்கான நேர அட்டவணைகளை ஒழுங்கமைத்தல், படகு சேவைகளின் போது பயணிகளுக்கு பாதுகாப்பு அங்கி அணிதல் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், நெடுந்தீவு உதவி பிரதேச செயலாளர், நெடுந்தீவுக்கான கடற்படை தலைமை அதிகாரி, நெடுந்தீவுக்கான கடற்படையினர், பொறியியலாளர் (RDO), நெடுந்தீவுக்கான படகு உரிமையாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 1 =

Back to top button
error: