ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் அணியைச் சேர்ந்த இருவர் இன்று (20) அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டமை தொடர்பில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டமை தொடர்பில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று (20) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாஸவின் அணியைச் சேர்ந்த இருவர் இன்று (20) நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தின் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) கோட்டை ஜனாதிபதி மாளிகையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள்
01. திரு.நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.
02. கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்.
03. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்.
04. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ – நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர்.
05. திரு.ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்.
06. திரு. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்.
07. திரு. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
08. திரு. நலின் பெர்னாண்டோ – வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்.
09. திரு. டிரன் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்