பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் மேலும் 9 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர்களாகப் இன்று (20) பதவியேற்றுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் இதன்போது அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
புதிய அரசில் 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ள நிலையில் ஏற்கனவே தினேஷ் குணவர்தன உள்ளிட்ட நான்கு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளதுடன், இன்று மேலும் 9 பேர் பதவியேற்றுள்ளனர்.
இதன்படி இதுவரையில் 13 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
எனினும், நிதி அமைச்சர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. நிதி அமைச்சுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும் எனக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(AJ)