ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று (20) அமைச்சர்களாகப் பதவியேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் புகைப்படங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தற்போது வெளியிட்டுள்ளது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் இன்று 9 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும்அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் இதன்போது அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
நிதி அமைச்சர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. நிதி அமைச்சுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும் எனக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சர்கள் விபரங்கள் வருமாறு:-
01. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.
02. கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்.
03. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்.
04. கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச – நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர்.
05. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்.
06. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்.
07. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
08. நளின் பெர்னாண்டோ – வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்.
09. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.