crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தைக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவத்தின் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தை தனது 35 வருட சேவையை நிறைவு செய்து சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (20) சேவையைப் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, மட்டக்களப்பு பிரிவிற்கான பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரஸ்ரீ,

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம், பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி கே. ரீ. சுந்தரேசன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட ஊடக அதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட இராணுவத்தரப்பு உயரதிகாரிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இறுக்கமான காலகட்டத்தில் மட்டக்களப்பு மக்களுக்காக இவரால் கடந்த ஒருவருட காலத்திற்குள் ஆற்றப்பட்ட சேவையைப் பாராட்டி மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களுடன் ஏனைய திணைக்களங்களின் பிரதானிகளும் இணைந்து இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 25 = 29

Back to top button
error: