crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொரோனா தொற்றுக்கு இலக்கான பரீட்சாத்திகளுக்கு தனியான வசதி

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை தோற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரீட்சை நிலையங்களில் தனியான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை இன்று (23) இலங்கை முழுவதும் 3,844 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார் .

ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 496 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர்.

பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை தற்போதைக்கு பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனின், கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு பிரவேசித்து தங்களின் அனுமதிஅட்டையினை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 40 = 48

Back to top button
error: