(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
அரசியல் செல்வாக்கைப் பயன் படுத்தி பொலீஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட் வ்ரகளை அகற்றி தகுதியானவர்களை பொலீஸ் பொறுப்பதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அப்படி அல்லாத பட்சத்தில் கிராம அதிகாரிகள் பொலீசாருடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளில் இருந்து தாம் நீங்கிக்கொள்வதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கம் (21) அறிவித்துள்ளது.
கண்டியில் நடத்திய ஊடக சந்திப்பொன்றின்போது, கிராம அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன மேற்படி அறிவப்பை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
இலங்கையில் உள்ள பொலீஸ் நிலையங்களில் இரண்டைத் தவிற ஏனைய அனைத்து பொலீஸ் நிலையப பொறுப்பதிகாரிகளும் அரசியல் நியமனம் பெற்றவர்கள் என அண்மையில் ஒரு யெ்தி வௌியானது. இதன் படி பார்க்கும் போது, பொதுவாக பொலீஸ் நிலையப் பணிகள் அனைத்தும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் குங்ஙச் செயல்கள் அதிகரிப்பதுடன் ஊழல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எனவே இப்படியான ஒரு நிலையில் அத்தகைய பொலீஸாருடன் இணைந்து பணியாற்றுவது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்காரணமாகிவிடும்.
எனவே உரிய அதிகாரிகள் திறமை மற்றும் சேவை மூப்பு போன்ற விதந்துரைக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும். அதற்கு நாம் ஒரு மாதகால அவகாசம் விதித்துள்ளோம். அப்படி தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் இலங்கை கிராம அதிகாரிகள் சங்கம் அத்தகைய பொலீஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் இருற்து தவிர்ந்துகொள்ளவதாக அவர் மேலும் தெரிவித்தார்.