பாடசாலையில் துப்பாக்கிச் சூடு, 19 குழந்தை மற்றும் ஒரு ஆசிரியர் மரணம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல்
அமெரிக்கா – டெக்ஸாஸ் மாகாணத்தின் உவால்டே (Uvalde) பிரதேசத்தில் ஒரு ஆரம்ப பாடசாலையில் நேற்று (24) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்துள்ளனர், அதேநேரம் துப்பாக்கிச் சூட்டடை நடத்திய நபரும் இறந்துள்ளார்.
ஒரு ரைபிள் துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் நுழைந்த அந்த வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 19 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர், ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர்
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் குறிப்பிட்டுள்ளார்
இந்த சம்பவம் அமெரிக்கர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அமெரிக்கர்கள் சம்பவம் தொர்பாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவில் துப்பாக்கி பாவனை தொடர்பான சட்டங்களை திருத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்