உள்நாடுபிராந்தியம்
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச செயலகத்தில் ‘Offer Ceylon’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று முன்தினம் (23) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் வளவாளராக நன்னடத்தை உத்தியோகத்தர் வ.விக்னராஜாஅவர்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.