பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச போலியான ஆவணங்களை வழங்கி சட்ட விரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் இன்று (27) குற்றவாளியாக இனங்காணப்பட்டு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில், நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, சஷீ வீரவன்சவுக்கு ரூ. 100,000 ரூபா அபராதத்தையும் செலுத்துமாறும் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தாவிடின் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்ததாக வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.