கொரோன வைரஸ் நிலைமை மற்றும் பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிலைமை காரணமாக கண்டி , பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் குறிப்பிடத்தக்களவு பொருளதார பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக பூங்காவின் பணிப்பாளர் ஜனரல் திருமதி சிலோமி கிருஸ்ணராஜா (08) தெரிவித்தாவது-
“சாதாரண காலங்களில் தினம் வெளிநாட்டு சுற்றுலாத் துறையிளர் சுமார் 2000 அளவிலும் உள்ளூர் சுற்றுலாத் துறையினர் சுமார் ஐயாரிம் பேர் அளவில் வருகை தருவர். அதாவது சராசரியாக மாதம் 65000 வெளிநாட்டினரும், 130000 உள்ளூர் சுற்றலாத்துறையினரும் வருகை தந்துள்ளனர்.
இவர்களுக்கு டிக்கட் கட்டணமாக மாதா மாதம் கிடைக்கும் தொகை அறவிடப்படும் தொகை மாதமாதம் பூங்காவிற்கு கிடைக்கும். தற்போது பூங்கா மூடப்பட்டுள்ளதால் சராசரி வருமானத்தை இலப்பதுடன் பராமரிப்புக்கான செலவினங்களையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் மாதமாதம் தற்போது சுமார் 500 இலட்ச ரூபா நட்டத்தை எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் சிரமத்திற்கு மத்தியில் பாராமரிப்பு விடயங்களை முன் எடுப்பதாக” பணிப்பாளர் தெரிவித்தார்.