நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து, 14 சடலங்கள் மீட்பு
நேபாளத்தில் பயணிகள் விமானமொன்று நேற்று (29) பயணித்த சில வினாடிகளில் மாயமாகி விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் சுமார் 14500 அடி உயர இமய மலைப் பகுதியில் இந்த விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய நிலையில் இன்று விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
விமானம் விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்படவுள்ளன
நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானமொன்ரே பயணித்த சில வினாடிகளில் மாயமாகி விபத்துக்குள்ளாகியுள்ளது
விமானம் காலை 9:55 மணிக்கு புறப்பட்டுள்ளதுடன் இதையடுத்து, காலை 10.11 மணிக்கு விமானத்துடனான தொடர்பு தடைப்பட்டுள்ளது
விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணித்தனர் என்றும் இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் நேபாள இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தேவ் சந்திர லால் கர்ணா தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இந்தியர்கள் மற்றும் ஜப்பானியர்கள் இருந்ததாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
டாரா ஏர்லைன்ஸின் ட்வின் ஓட்டர் ரக இரட்டை இஞ்சின் விமானமே இவ்வாறு யணித்த சில வினாடிகளில் மாயமாகி விபத்துக்குள்ளாகியுள்ளது
விபத்துக்குள்ளான விமான தொடர்பான மேலதிக விசாரணைகளை நேபாள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்