இலங்கையில் இன்னும் சில மாதங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 1,000 ரூபாவைத் தாண்டுமெனவும், ஒக்டோபர் மாதமளவில், நாட்டில் அரிசி தட்டுப்பாடு கட்டாயம் நிலவும் என்றும் கூட்டு விவசாய அமைப்புகளின் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கூட்டு விவசாய அமைப்புகள் சங்கத்தின் செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
பெரும்போக பயிர் செய்கைக்குத் தேவையான உரத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் பொறுப்புகூறவேண்டியவர்களின் கடப்பாடாகும் இல்லை எனின் நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்து அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என கூட்டு விவசாய அமைப்புகள் சங்கத்தின் செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்