வவுனியா – கணேசபுரம் காட்டுப்பகுதி கிணறு ஒன்றில் இருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் (30) மீட்கப்பட்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
வவுனியா – கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்ற 16 வயதான ராசேந்திரன் யதுர்சி நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற பகுதிநேர வகுப்பில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற சிறுமி, மாலை 5.30 வரையும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்
இதனைத் தொடர்ந்து பொலிஸா, இராணுவத்தினரும் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்ட அதேவேளை அந்தப் பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்னர்