நாவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 350 தொற்றாளர்கள், 27 மரணம்
நாவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஏப்ரல் 20 ம் திகதி முதல், இதுவரை 350 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன் 27 பேர் கோவிட் தொற்றால் இறந்துள்ளதாகவும் நாவலப்பிடிய பொது சுகாதார நிர்வாக ஆதிகாரி (10) தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் திகதி மட்டும் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 41 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். 8ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பஸ்பாகே கோரலே பொதுச் சுகாதார அதிகாரி காரியாலயத்தின் நிர்வாக அதிகாரி லலித் கொலமுன்ன இது பற்றித் தெரிவித்ததாவது
“வெலிகம்பொல பகுதியில் 15 பேரும், சொய்சாகல பகுதியிலிருந்து 17 பேரும், ஜயசுந்தரோவிட்ட பகுதியிலிருந்து 03 பேரும், நாவலப்பிட்டியா நகரத்திலிருந்து 03 வரும், இம்புல்பிட்டி பகுதியில் இருந்து 2 பேரும், பவ்வாகம பகுதியிலிருந்து ஒருவருமாக பதிவாகியுள்ளனர்.
புதிய நோய்த் தொற்றதலர்கள் ஏற்கனவே நோய்த் தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏப்ரல் 20 முதல், இதுவரை 350 பேர் பஸ்பாகே கோரலே மருத்துவ அதிகாரியின் அலுவலக பகுதியில் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்தாக இனம் காணப்பட்டுள்ளனர். மேலும் 27 பேர் கோவிட் தொற்றுநோயால் மரணித்துமுள்ளனர் என்று நிர்வாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.