crossorigin="anonymous">
உள்நாடுபொது

பதவி விலகும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு பிரியாவிடை

பதவி விலகும் இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு நேற்று (31) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் இராணுவ சம்பிரதாயங்களுக்மைய அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

விடுகை பெறும் தளபதி இராணுவ தலைமையக வளாகத்திற்கு வருகை தந்ததையடுத்து அவருக்கு வாகன அணிவகுப்பு மற்றும் இராணுவ மோட்டார் சைக்கில் செலுத்தும் வீரர்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதோடு, இராணுவ தலைமையக பிரிகேட் தளபதி பிரிகேடியர் இந்திக்க பெரேரா அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து கஜபா படையணியினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனையடுத்து இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க புதிய இராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் வெளியேறும் தளபதியை மரியாதையை ஏற்றுக்கொள்வதற்கான மேடைக்கு அழைத்து வரப்பட்டதுடன், தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கெப்டன் எஸ்ஆர்விகேஎஸ் பண்டார அவர்களின் தலைமையில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவத் தலைமையக கட்டிடத்தொகுதியில் இந்த அலுவலகத்தை வழிநடத்திய முதலாவது தளபதி என்ற வகையில், அனைத்து பிரதான பணிநிலை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்துகொண்டார்.

இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் இராணுவத் தளபதியாக பதவி வகித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, சகல பிரதிநிதிகள் முன்னிலையிலும் உரையாற்றிய போது, ஜெனரல் ஷவேந்திர சில்வா சகலருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு, தனது பதவிக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய தேசத்தின் பாதுகாவலர்களான இராணுவத்தின் விம்பத்தை மேலும் வலுவூட்டும் முயற்சிகளை மேற்கொண்ட சகலருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் தலைமை பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் ஒன்றுகூடி இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய போர்களத்தில் கடினமான பணிகளை சவால்களுக்கு முகம்கொடுத்த சிரேஷ்ட அதிகாரியும் தொழில் நலன், சர்வதேச உறவுகள், பயிற்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, விளையாட்டு, சமூகத் திட்டங்கள், கொவிட்-19 கட்டுப்பாடு, பசுமை விவசாயம், கண்டுபிடிப்புகள், மருத்துவ வசதிகள் போன்ற சகல துறைகளிலும் உயரிய இலக்குகளை அடைவதற்கு வழிவகுத்தவருமான வெளியேறும் தளபதிக்கு பிரியாவிடை வழங்கினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீதியோரங்களில் அணிவகுத்து இராணுவ தலைமையக வளாகத்திலிருந்து முன்னாள் தளபதி வெளியேறும் வேளையில் ‘ஜெய ஸ்ரீ, ஜெய ஸ்ரீ’ எனும் வெற்றி கோசங்களை எழுப்பி விடைக் கொடுத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 8 = 14

Back to top button
error: