crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அலுவலக உத்தியோகத்தர்களால் ஏற்பட்டு செய்யப்பட்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வலுவலகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஆண்டு இதே தினத்தில் மரணமடைந்திருந்தார். அவ்வாறு மரணமடைந்த அமரர் செ. ஜெயகாந்தன் குரூஸ் என்பரின் ஓராண்டு நினைவினை முன்னிட்டு மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவினால் இவ்விரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மாவட்ட செயலகத்தில் உள்ள அனைத்து கிளைகளின் அலுவலர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானத்தினை வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேற்றுப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்குத் தேவையான இரத்த தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக இவ்விரத்த தானம் வழங்கப்பட்டது.

போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர்குழாம் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து இவ்வுதிரங்களை சேகரித்துக் கொண்டனர்.

அலுவலக சக உத்தியோகத்தரின் நினைவாக இவ்வாறான மனித நேய பணியினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டமை வரவேற்கத்தக்கதும் முன்னுதாரணமுமான செயற்பாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 − 25 =

Back to top button
error: