இலங்கை தபால் திணைக்களம் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை பொறுப்பேற்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
விமானப் பயண சிக்கல் காரணமாக ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை தபால் அலுவலகங்களில் உள்ள கருமபீடங்களில் பொறுப்பேற்காமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இந்த சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றது. அதேபோல் மாற்று பயணப் பாதை ஊடாக ரஷ்யாவுக்கு அஞ்சல் பொருட்களை அனுப்பி வைக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
எனினும் பொறுப்பேற்கப்படும் அஞ்சல் பொருட்கள் சம்பந்தப்பட்ட அடைவிடத்திற்கு செல்ல தாமதமடையலாம் என்று தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.