கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகம்
கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு கல்முனை பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் தலைமையில பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (07) இடம்பெற்றது.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை சம்மேளன செயலாளரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி,ஏ.முபாறக் அலி, கல்முனை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அஸ்கி மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2022ஆம் ஆண்டுக் கான புதிய நிர்வாக தெரிவில் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக ஆர்.எம்.ஜெஸார், உபதலைவராக ஊடகவியலாளர் எம்.என்.எம்.அப்ராஸ், செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம், உப செயலாளராக அமாஸ் பொருளாளராக, சுரைப் அஹ்மட், அமைப்பாளராக எம்.ஆகில் உப அமைப்பாளராக,அமாஸ், உட்பட 21 பேர் கொண்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் இளைஞர் கழக சம்மேளனத்தின் முக்கியத்துவம் மற்றும் இதனால் இளைஞர்களுக்கான நன்மைகள் பற்றியும் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி இளைஞர்களுக்கு தெளிவூட்டினார்.