இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு இம்மாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரையில் நீடிக்கப்படுவதாக கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன் (11) தெரிவித்தார்
பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகள் இடம்பெறும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நடமாடும் வாகன மூலமான விற்பனை , ஆடைத் தொழிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும், கிராமங்களில் வாரத்தில் ஒரு நாள் சந்தை நடைபெறுவதுடன் இந்த சந்தைகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடாமல் நடத்தப்படுவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு திறக்கப்படுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான திகதியை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறினார்.