இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, இன்றிரவு (09) எட்டு மணிக்கு முன்னதாக கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே முன்னிலையில் சரணடைந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) இரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது
தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு ஜோன்ஸ்டன் தாக்கல் செய்திருந்த ரிட்மனுவை பரிசீலனைக்கு இன்று (09) உட்படுத்திய போதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.