பிராந்தியம்
மத்திய மாகாண அரச நிறுவனங்கள் பயிர் உற்பத்தி

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய மாகாண பெருவீதிகள் அபிவிருத்தி அமைச்சு வளாகத்தில் உணவு பயிர்கள் மற்றும் காய்கறி உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களின் எண்ணக்கருவின் படி மேற்படி விடயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிர்கால உணவு நெருக்கடிகளுக்கு மத்திய மாகாணத்தை தயார்படுத்தும் நடவடிக்கையாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதாகவும் கண்டிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயம் அறிவித்துள்ளது.