பொது
அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலை விடுமுறை
இலங்கை கல்வி அமைச்சு அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை 13 ஆம் திகதியை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் போக்குவரத்து சிரமங்கள், மின்சாரம் தொடர்பான சிக்கல்களை கருத்திற் கொண்டு இன்று திங்கட்கிழமை 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைபொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னேவினால் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொசொன் பெளர்ணமி தினமான நாளை ஜூன் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏற்கனவே விடுமுறை தினமாக உள்ள நிலையில், வார இறுதி நாட்களுடன் இணைந்தவாறு திங்கட்கிழமை இன்று 13 ஆம் திகதி தினத்தையும் விடுமுறை தினமாக அறிவிக்க்பபட்டுள்ளது.