குடிவரவு, குடியகல்வு திணைக்கள சேவைகள் ஜூன் 13 வழமைபோல்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவை நாளை திங்கட்கிழமை ஜூன் 13 ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வழமைபோல் சேவைகள் இடம்பெறுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் நாளையதினம் (13) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10 ஆம் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 13/ 2022 இன் பிரகாரம் ஜூன் 13ஆம் திகதி அரசு அலுவலர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவைகளைப் பெற முற்பதிவு செய்திருப்பது அவசியமாகும்.