crossorigin="anonymous">
பொது

கைவிடப்பட்ட காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க திட்டம்

இலங்கை அரசாங்கம் நாடு முழுவதிலும் உள்ள உற்பத்தி செய்யப்படாது கைவிடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளிலும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 5 வருடங்களுக்கு காணிகள் சுவீகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றன

கைவிடப்பட்ட பயிர்க் காணிகளின் எண்ணிக்கை 1 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சிற்கு உட்பட்டஅனைத்து வெளிநாட்டு நிதி வசதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதில் இளைஞர் சமூகத்தை விவசாய நடவடிக்கைகளில் ஈர்க்கக்கூடிய புதிய திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உலக வங்கி, ஆசியஅபிவிருத்தி வங்கி, உலக உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் 6 திட்டங்கள் விவசாய அமைச்சிற்கு உட்பட்டதாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளர் அமைச்சர்  தெரிவித்துள்ளர்

‘தேசிய விவசாயத்தை’ தம்மால் மேம்படுத்த முடியும் என்ற இலக்கை பெரும்பாலான இளைஞர்கள் கொண்டுள்ளனர். இருப்பினும், தற்போது விவசாயத்தில் இவர்களது பங்களிப்பு குறைவாகக் காணப்படுகின்றது.

வெளிநாட்டுச் சந்தைகளுக்கு போட்டி மிகுந்த ஏற்றுமதியைமேற்கொள்ள முடியும். மிளகாய், பழவகை உற்பத்திதொடர்பிலும் கவனம் செலுத்துவது கட்டாயமாகும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: