பிராந்தியம்
காத்தான்குடியில் இரத்ததான முகாம்
காத்தான்குடி குபா இளைஞர் கழகம் மற்றும் குபா விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து 3வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் காத்தான்குடியில் இன்று (19) இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி மணி முதல் காத்தான்குடி – 5 ஜாமியுழ்ழாபிரின் வித்தியாலயத்தில் இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.
இன, மத பேதமின்றி அனைவரையும் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு பங்களிப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.