crossorigin="anonymous">
பொது

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

மேல் மாகாணத்தில் ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் அடையாளம்

மேல் மாகாணத்தில் ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து மேல் மாகாணத்தில் இன்று (15) தொடக்கம் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டிடங்களை நிர்மாணித்தல், தொழிற்சாலைகள், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீரை சேமித்து வைக்கும் பீப்பாய்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், வாளி, பூச்சாடிகள் மற்றும் அகற்றப்படும் பொருட்கள் முதலானவை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் என டெங்கு குடம்பி விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நாட்டின் 16 மாவட்டங்களில் உள்ள 83 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆகக்கூடுதலாக டெங்கு நோய் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் 18 சுகாதார உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 1

Back to top button
error: