பிராந்தியம்
வடிகாண் துப்புரவு பணிகள் ஆரம்பம்
(யு.எல்.முஸம்மில்)
குருநாகல் நகரின் நீர்கொழும்பு வீதி துவங்கும் இடத்திலிருந்து மலியதேவ ஆண்கள் கல்லூரி வரையான இரு பகுதியிலுள்ள வடிகாண்கள் நீணட காலம் துப்பதுப்புரவு செய்ப்படாமல் இருந்ததால் மழை காலங்களில் நீர் தேங்கி நின்று பாதசாரிகளுக்கும் பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கும் பெரும் தொல்லையாக அமைந்திருந்தது.
குருநாகல் மா நகர சபையிடம் இது பற்றி பல முறை முறையிட்டபோதும் செயல்படுத்தப்படாதிருந்த நிலையில் மா நகர சபை உறுப்பினர் அஸாருதீன் அவர்களின் கண்டிப்பான கோரிக்கையையடுத்து துப்புரவு பணிகள் நேற்று முன்தினம் (13) ஆரம்பமாகின
உள்ளூராட்சி சபைகள் தேடிப்பார்த்து கட்டாயமாக செய்ய வேண்டிய வேளைகளை கெஞ்சிக் கூத்தாடி செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.