crossorigin="anonymous">
பொது

மட்டக்களப்பில் அறுவடை செய்யும் நெல்லின் ஒருபகுதி மாவட்ட மக்களின் பாவனைக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெல் அறுவடையின் ஒருபகுதியினை இம்மாவட்ட மக்களின் பாவனைக்கு முழுமையாக பயன்படுத்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார.

மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக உணவுத் தட்டுப்பாடு நிலை அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் இம்மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை அறுவடையினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டம் மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்கு தமக்குத் தேவையான உணவினைச் சேமித்துக் கொள்வதற்காக குறைந்தபட்டசம் ஒருகுடும்பத்திற்கு இரண்டு மூட்டை நெல்லினை கொள்வனவு செய்து வைத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளையும், ஊக்குவிப்புகளையும் வழங்குவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் ஆறுமாத காலததிற்கு மாவட்ட மக்களை உணவுப் பற்றாக்குறையிலிருந்து தக்காத்துக் கொள்வது தொடர்பாக ஆலோசிக்கும் விசேட கூட்டம் அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (16) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இத்தீர்மானம் உயர் சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் நெல் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து நெல்லினைக் கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் தனஞ்ஜயனின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில், வறிய குடும்பங்கள் தமக்குத் தேவையான நெல்லினைக் கொண்வனவு செய்வதற்கு வேண்டிய நிதியினை கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அமைப்புகளினூடாக வட்டியற்ற கடணடிப்படையில் வழங்குவதற்குத் தேவையான ஆலோசனைகளும் அரசாங்க அதிபரினால் இதன்போது வழங்கப்பட்டது.

இம்மாவட்ட மக்கள் அனைவரும் தமக்குத் தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வதற்காக குடும்பத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மூட்டை நெல்லினை கொள்வனவு செய்துகொளவதனூடாக உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து தவிர்ந்து கொள்ளமுடியும் எனவும், அதிக விலையேற்றம், பதுக்கல் மாபியாக்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் தமக்குத் தேவையான காய்கறி, பழமரக்கன்றுகளைக் கொண்ட வீட்டுத்தோட்டத்தினை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்விசேட கூட்டத்தின்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், மண்முனை வடக்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. எல். பிரசாந்தன், மண்முனை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 44 = 47

Back to top button
error: