கொழும்பு – யாழ்ப்பாண விசேட ரயில் சேவை ஆரம்பம்
கொழும்பு, கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை நகரங்களுக்கு இடையேயான இரவு நேர கடுகதி விசேட ரயில் சேவை இன்று (17) ஆரம்பிக்க திட்டமிடம்பட்டுள்ளன
கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை நகரங்களுக்கு இடையேயான ரயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்; கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி, கொழும்பு, பொல்கஹவலை, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்
பின்னர் அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு கோண்டாவில், சுன்னாகம் ஊடாக காங்கேசந்துறை ரெயில் நிலையத்தைச் சென்றடையும்.
கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை நகரங்களுக்கு இடையேயான ரயில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம், கோண்டாவில் ஊடாக இரவு 10.25 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை; வந்தடையும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், கம்பஹா, மருதானை ஊடாக கொழும்பு ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை தெஹிவளை, ஊடாக கல்கிசை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.