மாணவர்களுக்கு நீரியல் உயிர்காக்கும் நுட்ப செயல் அமர்வு
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
ஶ்ரீ லங்கா உயிர்காக்கும் சங்கம் மற்றும் மத்திய மாகாண விளையாட்டுத் திணைக்களம் என்பவற்றின் அனுசரணையில் வீனஸ் நீரியல் விளையாட்டுக்கள் கழகம் (Water Venus Aqua Ticks Club) முதன்முறையாக பாடசாலை மாணவர்களுக்கான உயிர்காக்கும் தொழில் நுட்பங்கள் தொடர்பான செயல்முறை அமர்வு ஒன்றை நேற்று முன்தினம் (19) நடத்தியது.
உயிர்காக்கும் தொழில் நுட்பங்கள் தொடர்பான செயல்முறை அமர்வு கண்டி திகன வினையாட்டு கூட்டுத் தொபுதியில் இடம் பெற்றது.
கண்டி பிரதேச உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்ட இந்த ஒரு நாள் செயலமர்வில் மாகாணத்தைச் சேர்ந்த 30 பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டு நீர் பரப்புக்களில் உயிர்காக்கும் தொழில் நுட்பங்கள் தொடர்பான நடைமுறை அறிவு வழங்கப்பட்டது.
கண்டி தேசிய வைத்தியசாலையின் விளையாட்டு மருத்துவப் பிரிவின் விளையாட்டு மருத்துவம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அசேல ரத்நாயக்க அவர்களினால் பிரதான உரை ஒன்றும் நடத்தப்பட்டது.
செயலமர்வில் மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.ஜகத் கீர்த்தி மற்றும் Water Venus Aqua Ticks Club இன் பயிற்சியாளர் திரு.உபாலி ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.