crossorigin="anonymous">
பொது

“கோட்டா கோ கம” எதிர்ப்பாளர் 19 பேர் கைது

கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர், இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடாரங்களை அமைத்து ஜனாதிபதி செயலக பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை காரணமாக, குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 21 பேரில் பௌத்த தேரர் ஒருவர், பெண்கள் 4 பேர், 16 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று இரவு (19), ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லும் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்கள் இரண்டை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (20) காலை அவர்கள் நிதியமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவற்றிற்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், குறித்த நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சேவையைப் பெற வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 68 − 63 =

Back to top button
error: