சிங்கள மொழி பாடநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கண்டி – அக்குறணை அஸ்டா (AZDA) அமைப்பின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் சாகவாழ்வினையும் புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இலவச சிங்கள மொழி பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (19) அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்
செயற்திட்டத்தின் ஊடாக வயது, பாடசாலை மற்றும் பிராந்திய அடிப்படைகளில் கடந்த மூன்று வருடங்களில் 18 தொகுதிகளை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கபட்டுள்ளது
இனங்களுக்கிடையில் சாகவாழ்வினையும் புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டுவரும் இலவச சிங்கள மொழி பாட நெறியின் முதல் தொகுதியில் உலமாக்களுக்கான சிங்கள மொழி பாடநெறிகள் நடாத்தப்பட்டுள்ளன.