கைது செய்யப்பட்ட “கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்களுக்கு பிணை
கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர், இன்று (20) கைது செய்யப்பட்டு பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
இவ்வாறு கைது செய்யப்பட்ட 21 பேரில் பௌத்த தேரர் ஒருவர், பெண்கள் 4 பேர், 16 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.
சந்தேகநபர்கள் பொதுவெளியில் பிறந்தநாள் கொண்டாடியதாகவும், பிணை வழங்கக்கூடிய குற்றத்தை இழைத்துள்ளதால் பிணை வழங்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
தலா ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப்பிணையில் அவர்களை விடுவிக்குமாறு, கோட்டை பிரதான நீதவான் திலிண கமகே உத்தரவிட்டார்
சந்தேகநபர்களை பிணையில் விடுவித்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்கள் 21 பேரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.