crossorigin="anonymous">
பொது

21ஆவது திருத்த சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

இலங்கை அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றக்கொள்ளப்பட்டுள்ளது

இலங்கை அமைச்சரவை, அரசியலமைப்புக்கு கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று (20) அனுமதி வழங்கியுள்ளதுடன் சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

21 ஆவது திருத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 ஆவது திருத்தம் அண்மையில் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆராயப்பட்டதோடு அவர்கள் முன்வைத்த திருத்தங்களுடன் புதிய திருத்த நகல் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 − = 17

Back to top button
error: