இவ்வாரம் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக, சஜித் பிரேமதாசஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை வெளிநடப்பு செய்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு தொடர்பில்லாத விடயங்களே விவாதிக்கப்படுவதால், இவ்வார பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக, சஜித் பிரேமதாசஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன
இன்றைய (21) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு இவ்வாறு வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைக் காண்பிக்கும் பொருட்டு, பாராளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.ம.ச. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தனது கட்சியின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் எவ்வித பயனையும் அளிக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது.
மக்களின் சிரமங்கள் மற்றும் குரல்கள் புறக்கணிக்கப்படும் நிலைக்கு பாராளுமன்றம் தற்போது வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.