crossorigin="anonymous">
பிராந்தியம்

கோழி வளர்ப்புக்கான உதவித் திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உலக உணவுத் திட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டுவரும் R5n செயற்திட்டப் பயாளிகளுக்கு கோழி வளர்ப்புக்கான உதவித் திட்டம் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உதவித் திட்டத்தை வழங்கி வைத்தார்.

இதன்போது நாட்டுக்கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு 45 நாள் வயது நிரம்பிய தலா 30 கோழிகள் மற்றும் கோழிக்கான உணவு, பாத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கோழிகளை வளர்ப்பதற்கு ரூபா 1,72,500 பெறுமதியான இரும்புக்கூடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் மூலம் பயனாளி ஒருவருக்கு 203 076.00 பெறுமதியான உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இச்செயற்திட்டதின் மூலம் வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் குடும்பங்களின் போசனைத்தேவையை நிறைவு செய்துகொள்ள முடியும்

KOICA நிறுவனத்தின் நிதி அனுசரனையில், உலக உணவுத் திட்டம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலகம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் தினைக்களமும் இணைந்து இச் செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக முகாமைத்துவ அலகின் உலக உணவு திட்டங்களுக்கான பணிப்பாளர் திருமதி.பவானி கணேசமூர்த்தி, கால்நடை வைத்தியர் எஸ்.அனுஷா, துணுக்காய் பிரதேசசெயலாளர் ஆ.லுதுமீரா, உலக உணவுத்திட்ட உப அலுவலகப் பணியாளர் திரு. வ.கஜானனன், அபிவிருத்தி உத்தியோகததர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து
கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 + = 15

Back to top button
error: