crossorigin="anonymous">
பிராந்தியம்

கருவேப்பங்கேணி பொதுச்சந்தை மக்கள் பாவனைக்கு

மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கருவேப்பங்கேணி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி நேற்று (24) வெள்ளிக்கிழமை பொது மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கா.சித்திரவேல் அவர்களும், விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், காலஞ்சென்ற மாநகசபை உறுப்பினர் தவராஜா அவர்களின் உறவினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு நகரை அண்டிய கருவேப்பங்கேணி பிரதேசத்தை வர்த்தக ரீதியாக முன்னேற்றும் நோக்கிலும் அப்பிரதேசம் சார்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலுமாக சந்தை தொகுதியானது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கட்டிட தொகுதியில் இறைச்சி விற்பனை கடைகள், மரக்கரி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் என்பனவற்றினை உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வில் கருவேப்பங்கேணி கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாக சபையின் உறுப்பினர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: